கடந்த 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் செட்டிநாட்டு நகரத்தார்களின் ஓர் அங்கமான இராங்கியம் கிராமத்தில் அடர்ந்த வனாதிரமாகக் கிடந்த ஒரு பகுதியை அப்போது இருந்த கிறிஸ்துவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஓர் ஊராக உருவாக்கி அதற்கு உலகரெட்சகர்புரம் என்று பெயரிட்டு 1917ம் ஆண்டு உலகரெட்சகர் பெயரில் சிறு கோவில் ஒன்று கட்டி வழிபட்டு வந்தார்கள். அதன்பின் 1930 களில் தற்போது கோவில் கொண்டுள்ள புனித சந்தனமாதா சுரூபத்தை நமது அண்டை நாடான இலங்கை தேசத்திலிருந்து கொண்டு வந்து வழிபட்டு வந்தார்கள். அதுமுதல் அன்னையின் புதுமைகள் பரவத் தொடங்கி புகழும் பரவத்தொடங்கியது. எனவே அப்போது இருந்த கோவிலை பெரிதுபடுதுவதர்க்காக அன்னையின் பக்கதர்கள் நன்கொடைகள் வசூலித்து அதன் மூலம் வந்த ரூபாயை வைத்து சற்று பெரிய ஆலயமாக கட்டி வழிபட்டு வந்தார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 2வது சனி, ஞாயிறுகளில் புனித சந்தனமாதாவின் திருவிழா விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். திருவிழா அன்று ஆண்டுதோறும் மழை பெய்து பக்தர்கள் அவதியுறுவதை கண்ட அன்னையின் பக்தர்கள்,ஆலயத்தின் மேற்குப் பக்கத்தில் மாபெரும் மண்டபம் அமைக்க விரும்பினார்கள். அன்னை ஆசீரளிக்கவே ஊரார்கள் ஒத்துழைப்புடன் அழகுற அமைக்கப்பட்டதுதான் "புனித சந்தனமாதா மக்கள் மன்றம்" புனித சந்தனமாதாவின் அற்புதத்தையும் ஆசீரையும் பெற்ற ஏராளமான பக்தர்கள் தினம்தோறும் வந்து புனித சந்தனமாதாவை தரிசித்து அன்னையின் ஆசீரை பெற்று செல்கின்றார்கள். |
வரலாறு